Skip to content
Home » பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பிரச்சார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (12.12.2022) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார உறுதிமொழியான, நமது சொல்லாலும், செயலாலும் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிப்பு நேராத வகையில் நடந்து கொள்வோம். நமது கவனத்திற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவோம் அத்துடன் சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நமது கிராமங்களில் குழந்தைத் திருமணம் நடைபெறா வண்ணம் விழிப்புடன் இருப்போம், குழந்தை திருமண ஏற்பாடு குறித்து தெரிய வந்தால் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உடனே தடுத்து நிறுத்துவோம். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பாலின சமத்துவ மன்றத்தின் மூலம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். எந்த ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை நிகழ்ந்தாலும் உடனடியாக 1091, 181 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம். பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பாலின அடிப்படையிலான வன்முறை எந்த வடிவில் நிகழ்ந்தாலும் பாரபட்சமின்றி குரல் கொடுத்து உரிய தீர்வு பெற்றுத்தர உடனிருப்போம் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் எஸ்.முருகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!