Skip to content
Home » விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் என்ற படத்தை

WATCH: விஜய் சேதுபதி - சந்தீப் கிஷனின் மைக்கேல் ட்ரைலர்! இயக்கியிருந்தார். அதோடு ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ளார். இவர்களுடன் கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ்

மாறுபட்ட கெட்டப்பில் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடிக்கும் மைக்கேல்  படத்தின் டீஸர் வெளியானது.! - தமிழ்க்ளிட்ஸ் தமிழ் செய்திகள்

இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை 3ம் தேதி  ரிலீசாகிறது. இந்நிலையில்  நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் விஜய்-ஐ சந்தித்து வாழ்த்து  பெற்றார். இத்திரைப்படம் வெளியானதற்கு அவரது வாழ்த்துகளையும் அன்பையும் பெற்றார். மேலும் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் மைக்கேல் படத்திற்கு அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!