கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடி உள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்

அலற அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் எடுத்தனர். பின்பு இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுக்க, விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் இருசக்கர வாகனத்தின் உள்ளே புகுந்த பாம்பை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள், காட்டுப்பகுதியில் விடுவதற்காக அதனை பத்திரமாக எடுத்துச் சென்றனர்.