சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது

இதில் தமிழகத்தில் உள்ள 16 சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வெற்றியடையும் முதல் மூன்று அணியினருக்கு பரிசு கேடயம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் கூறுகையில்:-
2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் தமிநாட்டில் உள்ள அனைத்து சட்ட கல்லூரியிலும் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி நடத்த வேண்டும் என அடிப்படையில் 5 மாநில அளவிலான போட்டிகளும், 3 தேசிய அளவிலான போட்டிகளும் உத்தரவிட்டது. இதற்காக சட்ட கல்லுரி இயக்குனர் தலைமையில் மாநில அளவிலான குழுவை உருவாக்கினார்.
இந்த மாதிரி நீதிமன்ற குழு கடந்த டிசம்பர் மாதம் முதல் மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தி வருகிறது. திருச்சி அரசு சட்ட கல்லுரியில் ஏற்கனவே மாதிரி நீதிமன்ற போட்டி நடத்தபட்டது. அதற்கு பிறகு 5 அரசு சட்ட கல்லூரிகளில் மாதிரி நீதிமன்ற போட்டி நடந்த்தப்பட்டு வருகிறது. மேலும் மாநில, தேசிய அளவிலான சட்ட கல்லூரியில் போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
குறிப்பாக சட்ட கல்லுரி மாணவர்கள் சர்வதேச அளவிலான மாதிரி நீதிமன்றம் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சர்வதேச மாதிரி நீதிமன்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக ,அரசு சட்டக் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் சர்வதேச அளவிலான நடைபெற உள்ள மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகள் இந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் பங்கேற்று உள்ளார்கள். இந்த மாதிரி நீதிமன்ற போட்டி என்றும் நாளையும் நடைபெற உள்ளது இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் குழுவுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.