திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் அந்த கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ,ராஜா ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். உடனடியாக போலீசார் அவர்களை மடக்கி பிடித்து 300 ரூபாய் பணமும், லாட்டரி சீட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
