Skip to content
Home » திருச்சி ஜிஎச்-ல் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார்…. டீன் நேரு பேட்டி

திருச்சி ஜிஎச்-ல் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார்…. டீன் நேரு பேட்டி

  • by Senthil

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில்  பிஎப் 7 கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுபோல அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தொற்று பரவி வருவதால்,  உலக சுகாதார நிறுவனம்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசும் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதை்தொடர்ந்து  தமிழக முழுவதும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய முதல் உதவிகள் குறித்த  ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் நோய் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை மையத்திற்குள் கொண்டுவரப்பட்டவுடன் அவருக்கு பிபி மற்றும் பிரஷர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பது மற்றும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை ஆராய்வது உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நடைபெற்றது.

இந்த செயல்முறை விளக்க பணிகள்அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நேரு கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் தற்போது அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது அதில் 50 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் 50 சாதாரண படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.25 தீவிர படுக்கை வசதிகளும் உள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு போதுமான அனைத்து வசதிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்க படக்கூடிய நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தேவையும் தற்போது அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது .. இந்த கொரோனா சிகிச்சை பிரிவை கண்காணிக்க 250 மருத்துவர்கள், செவிலியர்கள் 200 பேரும், தயார் நிலையில் உள்ளனர். மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!