Skip to content
Home » திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

  • by Senthil

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசும் போது :-

நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நமது திருச்சிராப்பள்ளி

மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 16.02.2023 அன்று ஜமால் முகமது கல்லூரியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டமாக, இன்று 16.03.2023 பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முக்கிய நோக்கமே, உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் பழமைவாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், தமிழர் பண்பாட்டில் கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வளரும் இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவதே நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றியவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்ட 20 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கேள்வி நாயகன். கேள்வி நாயகி மற்றும் பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் , மாநில திட்டஙகுழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ., சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம். பதிவாளர் கணேசன், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) செல்வம், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் செந்தில்குமார், தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்வரன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட சிவக்குமார், உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!