விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று காலை 11,30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து 10 நிமிடம் பேசினார். திருமாவளவனுடன் ரவிக்குமார் எம்.பி, மற்றும் அந்த கட்சியின் 4 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது 2ம் தேதி நடக்க இருக்கும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமா அழைப்பு விடுத்தார். பின்னர் அனைவரும் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் போட்டோவுக்கு போஸ்கொடுத்தனர். அப்போது முதல்வருக்கு பொன்னாடை கொடுத்தனர். இந்த சந்திப்பை பொறுத்தவரை இரு கட்சிகளுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்பதைப்போல தெரிந்தது.