Skip to content
Home » விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

  • by Authour

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநரான ராமகிருஷ்ணன் (33) அதே பகுதியை சேர்ந்த சிவகாமி ஸ்ரீ என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2021முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிவகாமி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் ராமகிருஷ்னன் மனைவியை பிரிய மறுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி சவாரிக்காக சென்னை வந்த ராமகிருஷ்ணன் தமது மனைவியை தொடர்பு கொண்ட போது சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அங்கு வந்த ராமகிருஷ்ணனை 3பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சோழவரம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் விவாகரத்து கொடுக்க மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை செய்ய முயன்ற மனைவி சிவகாமி ஸ்ரீ (24), நவீன் (23), கெல்வின் ராஜ் (20), நிதிஷ் ராஜ் (21) ஆகிய 4பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *