Skip to content
Home » இறந்ததாக கருதி பால் ஊற்றிய மகன்… உயிரோடு எழுந்த விவசாயி…..

இறந்ததாக கருதி பால் ஊற்றிய மகன்… உயிரோடு எழுந்த விவசாயி…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் விவசாயி. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடினர். இறுதி சடங்கிற்கு தாயர் செய்து வந்தனர். இந்நிலையில் வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர். இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றினார். அப்போது திடீரென்று  சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் ஏற்பட்டன. இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும், பதட்டத்துடனும் அவரை பார்த்தனர். சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கினார். உடல் நலமும் சீராகி இருந்தது. இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!