Skip to content
Home » தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

  • by Senthil

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வரும் 18ம் தேதி மாலை 6 மணிமுதல் 19ம் தேதி காலை 6 மணிவரை தஞ்சாவூர் திலகர் திடலில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது என தஞ்சை உதவி ஆணையர் கவிதா தெரிவித்துள்ளார்.  இதில் 18ம் தேதி மாலை 6 மணி முதல் 8. 15 மணி வரை டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினர் மங்கள இசை, மாலை 6.15 மணிமுதல் 6.30 மணி வரை சிவனேசன், தீபக்ராஜா வழங்கும் திருமுறை விண்ணப்பம், மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஆரம்ப விழா குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை கயிலை

வாத்தியம், இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை இலட்சுமணனின் தெருகூத்து , இரவு 8.15 மணிமுதல் 9 மணி வரை காமாட்சி பத்மநாபன் குழுவினர் நாத இசைசங்கமம் நடைபெற உள்ளது.

அதேபோல் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பத்மஸ்ரீ, கலைமாமணி சீர்காழி கோ.சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசையும், இரவு 10 மணி முதல் 11:30 மணி வரை நகைச்சுவை இராமலிங்கம் குழுவினர் பட்டிமன்றம், இரவு 11.30 மணி முதல் 12 மணி வரை கலைமாமணி தேன்மொழியின் பறை இசை நடைபெற உள்ளது. இரவு 12 மணிமுதல் 12.30 மணி வரை கலைமாமணி ஸ்ரீகலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியம், இரவு 12.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை திவ்யசேனா குச்சிபுடி, அதிகாலை 1 மணி முதல் 1.30 மணி வரை கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரன் காவடி ஆட்டம், அதிகாலை 1.30 மணி முதல் 3 மணி வரை கரகாட்டம் கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரனின் நையாண்டி மேளம், சிவன் சக்தி ஆட்டம் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை தனியார் தொலைக்காட்சியினர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தேவஸ்தானம் சார்பாக அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!