Skip to content
Home » தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (65) விவசாயியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை செய்துவிட்டு அதற்குரிய பணம் வங்கியில் அவரது கணக்கில் வந்து இருப்பதை அறிந்தார். பின்னர் அதை எடுத்து செல்ல கபிஸ்தலத்தில் உள்ள வங்கிக்கு வந்து ரூபாய் 72 ஆயிரத்தை எடுத்தார்.

பின்னர் தனது பைக்கின் டேங்கர் கவரில் பணத்தை  வைத்துக்கொண்டு மீண்டும் ராமானுஜபுரம் நோக்கி சென்றார். அப்போது இதை பார்த்துக்கொண்டிருந்த ஹெல்மெட் அணிந்த 2 மர்ம ஆசாமிகள் பைக்கில் அவரை பின்தொடர்ந்து கபிஸ்தலம் பவுண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்றபோது அவரிடம் கீழே பணம் கிடக்கிறது என கூறி உள்ளனர். அவர் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து திரும்பி பார்த்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமிகள் விவசாயின் மோட்டார் சைக்கிளின் முன் கவரில் இருந்த ரூபாய் 72 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் உடனடியாக கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், அன்புநம்பியார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விவசாயின் மோட்டார் சைக்கிளில் பணத்தை கொள்ளை அடித்து சென்ற ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!