Skip to content
Home » நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி துவக்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:  நேற்று தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு துறையின் 6  உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ளது.

நமது தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகளில் 569 உணவு மாதிரிகள் தரமற்ற உணவு மாதிரி உள்ளாக அதாவது லேபிள் குறைபாடு தரம் குறைந்த பாதுகாப்பற்ற மற்றும் தடை செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்கள் என்று

கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடமாடும் உணவு ஆய்வகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் உள்ள உணவுப் பொருட்களின் தரம் அதில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிந்து அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் உணவு ஆய்வகத்தில் குடிநீர், பால், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள். இனிப்பு கார உணவு வகைகள் மற்றும் இதர மளிகை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தினை உடனடியாக ஆய்வு செய்வதற்கு ஏற்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தரம் குறைந்த மற்றும் கலப்படம் உள்ள உணவுப் பொருட்கள் லேபிள் குறைபாடு உள்ள மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 569 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 64,22,500 ரூபாய் வருவாய் ஈட்டி தரப்பட்டுள்ளது எ ன்று இவ்வாறு தெரிவித்தார். இதில் தஞ்சை கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பிரேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!