வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடும் சூழல் இங்கு ஏற்படவில்லை. புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை. தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
