Skip to content
Home » கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில்  ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது…. கடன் தள்ளுபடி  நெருக்கடியான சூழல் சங்கங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பயிர் கடன்கள் வழங்கப்படும் . பொழுது சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உறுப்பினர்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில் பல விதிமுறைகள் அதிகாரிகளால் வாய்மொழியாக உத்திராடப்பட்டு குறியீட்டை எட்ட நிர்பந்திக்கப்படுகிறது. இவ்வாறு கொடுத்த கடன்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதி மீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது எந்த ஒரு செயலாளரும் விருப்பப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்பதை கருத்தில் கொண்டு இது தொடர்பில் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக விளக்கி கொள்ளவும்.

கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர் கடன் நகை,  மகளிர் சுய உதவி குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பு இன்று அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் . தவணை தவறிய நகை கடன்களின் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு தொகைக்கு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதி பயனை நிறுத்தி வைக்கும் தவறான நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட்டு இழப்புத் தொகையை நட்ட கணக்கிற்கு எடுத்து செல்ல நிபந்தனையற்ற தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

சங்க செயலாளர்கள் பொதுப்பணி நிலை திறன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களை எழுத்துப்பூர்வமாகவும் நேரிலும் தெரிவித்துள்ளோம். இதில் இனியும் காலதாமதம் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்து செயலர்கள் பாதுகாப்பான வழியில் பணி பார்க்கும் உகந்த நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமையிலும் மாவட்ட செயலாளர் கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!