Skip to content
Home » சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். அதில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில்  இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கினர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் யார் என  கண்டுபிடிக்கப்பட்டது.

சூட்கேசில் சடலமாக காணப்பட்டது சென்னை அடுத்த மணலியை சேர்ந்த தீபா (32 வயது) என்பதும் திருமணமாகாதவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது எனக் கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர் இதனிடையே, சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே வசித்து வந்த மணி என்பவரை  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *