திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பழுதான குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று நடந்தது. இதில் திருச்சி மிளகுபாறை செல்வம் உள்பட பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சுமார் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டி குழாயை சீரமைத்துக்கொண்டிருந்தனர். செல்வம்15 அடி ஆழ பள்ளத்துக்குள் நின்று பணி செய்து கொண்டிருந்தார்.
திடீரென அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இதில் செல்வம் மண்ணுக்கு அடியில் சிக்கி கொண்டார். அவரது கழுத்து வரை மண் மூடிவிட்டது. மண்ணை அகற்றி செல்வத்தை மீட்கும் முயற்சியில் மற்ற தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அங்கு ஏற்கனவே பணியில் இருந்த பொக்லைன் மூலம் சரிந்த மண்ணை அகற்றி வருகிறார்கள். செல்வத்துக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு மீட்பு பணி நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்துள்ளனர்.