Skip to content
Home » தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்…. இலங்கை அதிபர் பேச்சு

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்…. இலங்கை அதிபர் பேச்சு

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம்  நடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றாா்

அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை  நேற்று சந்தித்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ” அனுரா குமார  திசநாயகே பேசினார்  அவர் பேசியதாவது:”அதிக தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்கு சொந்தமான நீர்வளங்களை தமிழக மீனவர்கள் அழிக்கின்றனர். எங்கள் அரசாங்கம், நீர்வளங்களை தவறாகப் பயன்படுத்தப்படாமல்இருப்பதை உறுதிசெய்யும். அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *