Skip to content
Home » அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

  • by Senthil

பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் கூறியுள்ளதாவது…  அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே( மும்பை ),சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி இயக்கம் அகமதாபாத்தில் இருந்து சூரத்,புனே,சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி(வண்டி எண்: 09419/09420 வருகின்ற ஜனவரி மாதம் 29 ம் தேதி வரை இயங்கும். இந்த வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும். இந்த இரயில் வண்டி வருகின்ற 25/12/2022, 1/1/2023, 8/1/2023,15/1/2023,22/1/2023,29/1/2023 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25 க்கு வந்து சேரும்,பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 23/12/2022, 30/12/2022, 6/1/2023, 13/1/2023, 20/1/2023,27/1/2023 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும் என்பதை அறியவும். இந்த வண்டியின் மூலம் சென்னை ,திருப்பதி (ரெனிகுண்டா),புனே,கல்யாண்,(மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லாம்.  சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த இரயில் இணைப்பு வண்டியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!