கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.