Skip to content
Home » தேர்தல் முடிந்ததும் ஷெட்டரை காங். தூக்கி எறியும்….பசவராஜ் பொம்மை சொல்கிறார்

தேர்தல் முடிந்ததும் ஷெட்டரை காங். தூக்கி எறியும்….பசவராஜ் பொம்மை சொல்கிறார்

கர்நாடகாவில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டார். வருகிற மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக அக்கட்சிக்கு எதிராக சில விசயங்களை கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.  இதனால், கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்  இன்று காங்கிரசில் சேர்ந்து விட்டார்.

முன்னாள் முதல்-மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தி உள்ளது என கூறப்படுகிறது. இதனால், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என்றும் ஷெட்டார் குற்றச்சாட்டாக கூறினார்.

ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது. இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா மற்றும் தேவராஜ் அர்ஸ் ஆகியோரை வெளியேற்றிய கட்சிக்கு அவர் சென்றிருக்கிறார். முதலில் கவுரவம் கிடைக்கும். தேர்தலுக்கு பின்பு அவருக்கு அவமதிப்பு கிடைக்கும். ஜெகதீஷ் ஷெட்டாரை பயன்படுத்தி விட்டு, தூக்கி எறிந்து விடுவார்கள் என கூறியுள்ளார். பி.எஸ். எடியூரப்பா எங்களுடன் இருக்கும்வரை, லிங்காயத்துகள் எங்களுடன் இருப்பார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!