Skip to content
Home » ”புஷ்பா-2” படம் செம ட்ரீட்….பரபரப்பான திரைக்கதை….

”புஷ்பா-2” படம் செம ட்ரீட்….பரபரப்பான திரைக்கதை….

  • by Authour

செம்மரக்கடத்தலில் மாஃபியாவாக மாறிய புஷ்பா ஜப்பான் வரை தனது வியாபாரத்தை செய்கிறார்.

அத்துடன் முதல் பாகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பன்வார் சிங், தம்பியின் மரணத்திற்கு பழி தீர்க்க நினைக்கும் தாக்ஷயணி ஆகியோரை எப்படி புஷ்பா சமாளிக்கப் போகிறார் என்ற கேள்விக்கு பதில் தந்திருக்கிறது இப்படம்.

மேலும் முதலமைச்சர் தன்னை அவமதித்ததால் பழிதீர்க்க புஷ்பா எடுக்கும் முயற்சிகள்தான் படத்தின் கதை.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

படம் பற்றிய அலசல்

பான் இந்தியா படமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் AGS நிறுவனம் சுமார் 800 திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளது. புஷ்பாவாக அல்லு அர்ஜுன் இப்படத்தில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். பல காட்சிகளில் படத்தை தனது தோளில் சுமக்கும் அவர், சண்டைக்காட்சிகள் மற்றும் நடனத்திலும் அதகளம் செய்திருக்கிறார்.

அதே போல் பகத் பாசிலுக்கான அறிமுகமும் மிரட்டலாக இருந்தது. புஷ்பராஜை பழிவாங்க துடிப்பதில் அவர் ஆவேசம் காட்டுகிறார். இவர்களுக்கு அடுத்தப்படியாக ராஷ்மிகா மந்தனாவும் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.

அல்லு அர்ஜுனுக்காக அவர் ஒரு காட்சியில் பேசும் நீளமான வசனம் கைதட்டல்களை பெறுகிறது. ரொமான்ஸ் மற்றும் நடனம் என இரண்டிலுமே ராஷ்மிகா அசத்தியுள்ளார். பீலிங்ஸ் பாடல் இமைக்காமல் பார்க்க வைக்கும் அளவிற்கு அவரது ஆட்டம் உள்ளது.

மூன்று மணிநேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை எங்கும் தொய்வில்லாத வகையில் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் சுகுமார். படம் முழுக்க மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும், சென்ட்டிமென்ட் காட்சிகள் மனதை தொடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

கிஸ்க் பாடலுக்கு வரும் ஸ்ரீலீலா நடனத்தில் அசர வைக்க, மிரோஸ்லாவ் குபா ப்ரொஸிக்கின் கேமெரா ஒர்க் மிரட்டியிருக்கிறது.

படத்தின் பிரம்மாண்டம் காட்சிக்கு காட்சி தெரிந்திருக்கிறது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதை அவற்றை மறக்கடிக்கின்றன. பரபரப்பான திரைக்கதை அல்லு அர்ஜுன் பாடல்கள் சென்டிமென்ட் வசனங்கள் . மொத்தத்தில் புஷ்பா சர்வதேச அளவிற்கு உயர்ந்து ரூலிங் செய்துள்ளார். பக்கா கமர்ஷியல் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *