Skip to content
Home » ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் காலமானார்

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான   சரத்யாதவ்75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை துவக்கினார். இதனையடுத்து மார்ச் 2022-ல், யாதவ், முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எல்ஜேடி கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்தார். 7 முைற மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரத் யாதவ்.  வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

ரத்யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் மந்திரி என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!