Skip to content
Home » பஸ்சில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15லட்சம் பறிமுதல்…..

பஸ்சில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15லட்சம் பறிமுதல்…..

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் பிருந்தா  உத்தரவுப்படி பொள்ளாச்சியில் இருந்து குட்கா,பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கும் விதமாக போலீசார்பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதையடுத்து பொள்ளாச்சி மேற்க்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட இரவு ரோந்துபணியில் கிழக்கு காவல் நிலையா ஆய்வாளர்   ஆனந்தகுமார்,  SSI மலைக்கனி  ஆகியோர் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்சில்  சோதனை செய்தனர்.  அப்பேருந்தில் இருந்த நபரை  சோதனையில் புதுகோட்டையை சேர்ந்த முகம்மது அப்துல்லாவை சோதனை செய்தபோது முறையான ஆவணம் இன்றி ரூ. 15 லட்சம் பணம் கேரளாவுக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது, இவர் புதுக்கோட்டை மாவட்டம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் ஆபீஸ் உரிமையாளர் பஷீர் என்பவர் ரூபாய் 15 லட்சம் பணம் கொடுத்து கேரள மாநிலம் திரூர் பேருந்து நிலையம் சென்று  பைசல் என்பவர் இடம்  கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தார். மேலும் மேற்கு காவல் நிலைய போலீசார் முகம்மது அப்துல்லா இடம் ஹாவலா பணமா மற்றும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என குறித்து விசாரணை செய்தனர். மேலும் முகம்மது அப்துல்லா மற்றும் ரூபாய் 15 லட்சத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம்  போலீசார் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!