Skip to content
Home » நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

  • by Senthil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் சார்பாக பாபா திரைப்படத்தை இரவு காட்சி கண்டு களித்த பிறகு திரையரங்க வாசலில் பிரம்மாண்ட கேக்கை வெட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி  பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கொண்டாட்டத்தின் போது ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டம் என தங்களது தலைவர் ரஜினி பிறந்த நாளை கொண்டாடினர் இதைத் தொடர்ந்து இன்று பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவியும் ஆசிரமங்களில், அன்னதானமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!