Skip to content
Home » தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

  • by Senthil

நடிகர் ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவர் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு வெளியானது.

புது படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அந்த அளவுக்கு ரஜினியின் ரீ-ரிலீசான பாபா திரைப்படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளும் திரையிடப்பட்டன.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகியோரும்  சென்னை  வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

அப்போது ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி  தியேட்டரில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்  அந்த கேக்கை வெட்டினார்இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!