Skip to content
Home » 4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதியர். இவர்களது மகன் வீரபாண்டி (25). குடும்ப வறுமையின் காரணமாக வீரபாண்டி கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டுக்கு வேலைக்காக சென்று அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் கீப்பராக ரூ.20 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ந் தேதி கனரக வாகனம் அவர் மீது மோதியது. பக்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தகவலை கேட்டு பதறி போன பெற்றோர் தங்கள் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என நினைத்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வர வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்பதால் கையில் பணம் இல்லாத காரணத்தினால் செய்வதறியாமல் தவித்து வந்தனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஒரு சமூக ஆர்வலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தாய் அழகியின் 4 மாத போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் வீர பாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது தன் மகனை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது, அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வீரபாண்டியை அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!