புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்கள் தங்கபத்திரத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என கோட்ட அஞ்சல்தறை கண்காணிப்பாளர்கு.தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து கு. தங்கமணி கூறியதாவது:
புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் ஆர்பிஐ. யின் தங்கபத்திர திட்டம் வரும் 19.12.2022 முதல் 23.12.2022 வரை நடைமுறையில் உள்ளது . இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு கிராம் Rs 5409/- என ஆர்பிஐ. நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக, முதலீட்டு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% வட்டியும் உண்டு. மேலும் விவரங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் அல்லது 9865546641 என்ற அலைபேசி எண்ணிலும் அறிந்து கொள்ளலாம். சென்ற நிதியாண்டில் 171 வாடிக்கையாளர்கள் 2622 கிராம், தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர் . எனவே இந்த அரிய வாய்ப்பை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டுள்ளார்.