நடந்து முடிந்த 10ம்வகுப்பு
பொதுத்தேர்வில் புதுக்கோட்டை, அரிமழம்
அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி
98.04சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.காயத்திரி 481
மதிப்பெண்கள் பெற்று பள்ளியில்
முதலிடம் பெற்றார்.இவர்
அரிமழத்தில் இயங்கிவரும்
மூன்று பள்ளிகளிலும் தேர்ச்சி
பெற்ற மாணவர்களில் இவர்
ஒருவரே அதிக மதிப்பெண்
எடுத்துள்ளார்.
பள்ளியில் 2வதாக மாணவி
ஆர்.திஸ்சாந்தி 462 மதிப்பெண்கள்
எடுத்துள்ளார்.3வதாக மாணவிகள்
பி.நந்தினி ,எஸ்.வேம்புக்கரசி
இருவரும் தலா 438மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர்
முத்து செல்லப்ப செட்டியார்
மற்றும் சக ஆசிரியர்கள்
வெகுவாக பாராட்டி இனிப்புகளை வழங்கினர்.
