சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11ம் வகுப்பு மாணவர்கள் சத்தமி் போட்டுக்கொண்டு இருந்தனர். வகுப்பு ஆசிரியர் எவ்வளவோ கூறியும் அவர்கள் கட்டுக்குள் வரவில்லை. சில மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்த்து பேசி உள்ளனர். இது குறித்து பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசாரை வரவழைத்தார். போலீசார் வந்து மாணவர்களை லத்தியால் அடித்து உதைத்ததாக தெரிகிறது. பின்னர் அவர்களை ஒரு அறையில் பூட்டி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல்அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.