Skip to content
Home » நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க சாலை  பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர்.  கடந்த 2022ம் ஆண்டு  இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஐஃபோன், லேப்டாம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது  வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர்  மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்பாக சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்தபோது தன்னை துன்புறுத்தியதாகவும்,  அபாண்டமாக திருட்டுப்பட்டம் கட்டி  தான் தங்கியிருந்த அறையில்  வைத்து தாக்கியதாகவும் தன்னை நடிகை பார்வதி நாயர், அயலான் பட தயாரிப்பாளர் உள்ளிட்ட 7 பேர்  மீது  புகார் அளித்திருந்தார். பின்னர் தனது புகார் மீது  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததும்  நடவடிக்கை எடுக்கவில்லை என  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நடிகை பார்வதி நாயர்

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் உடனடியாக தவறான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.  கடந்த  29 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும்  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுவரை எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பி என்னை தாக்கவும் செய்துள்ளனர்.  நான் தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் என்னை இது போன்று இழிவுபடுத்தியும்,  மேலும் தேவையில்லாமல் என்னை கார்னர் செய்து வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.   பணம் படைத்தவர்கள் மட்டுமே இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுவார்கள். இது போன்ற நடவடிக்கையில் வேறு யாருக்கும் நடக்க கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.  புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *