Skip to content
Home » நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

தமிழகத்தில்  புதிய மன்னர்கள் முடிசூடும்போது   ராஜகுருவாக இருப்பவர்கள், மன்னருக்கு செங்கோல் அளித்து ஆசீர்வாதம் செய்வார்கள். இது தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட மரபு. இந்த நிலையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று இங்கிலாந்து அறிவித்ததும்,  முதல் பிரதமராக பதவி ஏற்கும் நேருவுக்கு செங்கோல் ஒன்றை வழங்க  திருவாவடுதுறை ஆதீனம் முடிவு செய்தது. இதற்காக திருவாவடுதுறை  20வது ஆதீனம் அம்பல்வாண தேசிகர் தங்கச் செங்கோல் ஏற்பாடு செய்தார் உடல்நலக்குறைவால்  அவரால் செல்ல முடியவில்லை. எனவே தம்பிரானை(இளைய ஆதீனம்) அனுப்பி அதனை நேருவிடம் வழங்கினார்.

இந்த சுதந்திரச் செங்கோல் தற்போது உ.பி.  மாநிலம் அலகாபாத் நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அந்த இல்லம் இப்போது அரசின் நினைவு இல்லமாக உள்ளது.  தற்போது புதிய  நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதால், ஆனந்தபவனில் உள்ள செங்கோலை  கொண்டு வந்து மக்களவையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த செங்கோல் டில்லிக்கு கொண்டு வரப்பட்டு அதை புதுப்பிக்கும் பணி நடந்து திருவாவடுதுறை மடத்தின் 24வது ஆதீனம் அம்பலவாணதேசிக சுவாமிகளிடம கேட்டுக் கொள்ளப்பட்டதன்பேரில்,  அவர் வரும் 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை சுவாமியான  தம்பிரான் சுவாமிகள் செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார்.
திருவாவடுதுறை 24வது சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  இந்த தகவலை உறுதி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!