மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை , மாநிலங்கை கூட்டம் தொடங்கியது.மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ராகல்காந்தி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை சபையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
இதுபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி பேசினர். இதனால் அங்கும் கூச்சல் ஏற்பட்டதால் சபையை பிற்பகல் 2 மணி வரை அவைத்தலைவர் தன்கர் ஒத்திவைத்தார்.