சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தொண்டர்களை ஒருங்கிணைப்போம் என சசிகலா வெளியிட்டது வெற்றுக் காகிதம். வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் . ஏராளமான வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சார்பில் மத துவேச பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சொதப்பிவிட்டது; வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற குளறுபடிகள் தேர்தல் ஆணையத்தின் தோல்வி. என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே இந்த முறை வாக்குரிமை இல்லாமல் போனது; வாக்காளர் பட்டியல் இருந்து அவர்களுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , அதிமுக-விற்காக உழைக்காமல், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தனது மகனுக்காக உழைத்தேன் என ஒரு புகைப்பட ஆதாரத்தை காட்டினால் ரூ.1 கோடி வழங்க தயார் என்றார்.