Skip to content
Home » ரசிகர்களை மிரட்ட வரும் நயன்…. கனெக்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

ரசிகர்களை மிரட்ட வரும் நயன்…. கனெக்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

  • by Senthil

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா, தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இப்படத்தை ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கிவுள்ளார். நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

connect

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஹாரர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‌.

ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் கிறிஸ்துமசையொட்டி வரும் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாரர் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!