Skip to content
Home » அமைச்சரவை மாற்றம்….முதல்வர் ஸ்டாலின் புதிய தகவல்

அமைச்சரவை மாற்றம்….முதல்வர் ஸ்டாலின் புதிய தகவல்

தமிழக அமைச்சரவையில் இன்று அதிரடி மாற்றம் செய்யப்படும் என  தகவல்  வெளியானது. 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 3 அமைச்சர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என  அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சாவை மாற்றம் குறித்து தனக்கு   தகவல்  எதுவும் வரவில்லை ‘ என்றார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மறுத்து கருத்து தெரிவித்ததால்  இன்று அமைச்சரவை மாற்றம் இருக்காது என்று கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *