தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 5, 6 ம் தேதிகளில் கள ஆய்வுக்காக கோவை சென்றார். அப்போது அவரை, கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் அன்று மாலையே தங்க நகை தொழில் செய்யும் பகுதிக்கு சென்று அங்குள்ள பட்டறைகளை நேரில் ஆய்வு செய்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து விவரமாக கேட்டறிந்தார்.
மறுநாள் அரசு விழாவில் பேசிய முதல்வர் கோவை குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி தங்க நகை செய்யும் பூங்காவுக்கு தமிழக அரசு இன்று டெண்டர் கோரி உள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்கள்..
கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ 126/- கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கோவை மக்களின் சார்பாக கோடன கோடி நன்றிகள்..
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.