சென்னை சிந்தாதிரிப்போட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், நிர்வாக இயக்குனர் ராஜகோபால் கன்கரா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
