Skip to content
Home » வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

நேற்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு 3.50 லட்சம் என்றும் தேசியம் பேசும் அண்ணாமலை இவ்வளவு காஸ்ட்லியான வாடச் கட்டியிருப்பது  நியாயமா? பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  இது தொடர்பாக  தமிழக மின்துறை  அமைச்சர் செந்தில்பாலாஜி ..

பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?

கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? என கேள்வி எழுப்பி டிவிட்டர் பதிவிட்டிருந்தார்.. வைரலான இந்த டிவிட்டருக்கு இன்று பதில் அளித்த அண்ணாலை,  பா.ஜ.க மாநில தலைவராக தேர்வு செய்யப்படும் முன்பே ரபேல் கடிகாரத்தை வாங்கிவிட்டேன். கைக்கடிகாரம் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன.  கடந்த 10 வருடங்களுக்கான எனது வங்கி பரிவர்த்தனைகள் ஒரு லட்சத்திற்கு மேலான அசையா சொத்து விவரங்கள், ஆடு, மாடு விவரங்களையும் கூட நான் வெளியிட தயாராக உள்ளேன். என விளக்கம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் இன்று மதியம் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டார்… அதில்

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

எங்கோ போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாளிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த
ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? 

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

எங்கோ போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாளிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த
ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?..   

என பதிவிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!