Skip to content
Home » ராகுல் 100 நாள் வெற்றி பயணம்… திருச்சியில் இளைஞர் காங்கிரசார் நடைபயணம்…

ராகுல் 100 நாள் வெற்றி பயணம்… திருச்சியில் இளைஞர் காங்கிரசார் நடைபயணம்…

  • by Senthil

ராகுல் காந்தி எம்.பி.யின் இந்திய ஒற்றுமை பயணம் வெற்றிப் பயணமாக நூறாவது நாளை நிறைவு செய்ததையொட்டி இன்று காலை மலைவாசல் பிள்ளையார் கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில்இன்று நடந்தது. பின் அங்கிருந்து ஊர்வலமாக சின்னக்கடை வீதி நான்கு ரோட்டில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சரவணன், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முரளி, இளைஞர் காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், திருச்சி இளைஞர், அப்துல் காதர், இளைஞர் காங்கிரஸ் காங்கிரஸ் கிழக்கு

தொகுதி தலைவர் முகமது ரஃபி, 11-வது வார்டு தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், 16-வது வார்டு தலைவர் சம்சுதீன், மகிளா காங்கிரஸ் அஞ்சு, கலைப் பிரிவு கோட்டத் தலைவர் ராஜீவ் காந்தி, நாகமங்கலம் சீனிவாசன், சண்முகம், தமிழ்நாடு ஊடகப்பிரிவு தலைவர் அபூ, சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், இளைஞர் காங்கிரஸ் ஜி.எம்.ஜி. மகேந்திரன், மணிவேல், நிர்மல் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!