Skip to content
Home » மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….

மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 273 அடி உயர மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குபார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த மலைக்கோட்டை சுமார் 3 ஆயிரத்து 500 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். இக்கோவில் 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த மலையின் உச்சியில் உ உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுவில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக மாலை 5 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து மேள, தாளங்கள் ஒலிக்க, வாணவேடிக்கைகள் முழங்க தீப்பந்தத்துடன் செவ்வந்தி விநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகள் புறப்பாடாகி உச்சிமலைக்கு சென்று உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரே இச்சி மரம் முன்பாக எழுந்தருளினர்.

மேலும் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயர கோபுரத்தில் பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 6 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டு, ஆயிரம் லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு மாலை 6 மணி 13 நிமிடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ என்றும், அரோகரா அரோகரா என்றும், கோஷங்கள் எழுப்பி சுவாமியையும், தீபத்தையும் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மை உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பாடாகி மலைக்கோட்டை உள்வீதிகள் மற்றும் வெளிவீதிகளில் வலம் வந்து, மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். வழக்கமாக மலைக்கோட்டையில் மாலை 6 மணி 1 நிமிடத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால் நேற்று 12 நிமிடம் தாமதமாக 6 மணி 13 நிமிடத்திற்கு தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும்மலைக்கோட்டையில் மாலை 6 மணி 1 நிமிடத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால் நேற்று 12 நிமிடம் தாமதமாக 6 மணி 13 நிமிடத்திற்கு தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மலைக்கோட்டையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அனைவரின் வீடுகளிலும் அகல் விளக்குக கார்த்திகை தீபங்கள் ஏற்றி சிவனை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!