கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வாரம் தமிழகத்தில் மிதமான மழையே பெய்யும் என வானிலை மையம் கணித்து உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள்( டிச.,7) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்து உள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும், 12ம் தேதி வங்கக்கடலில் தமிழகம் – இலங்கை கடலோர பகுதிகளை அடையலாம் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.