Skip to content
Home » கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Senthil

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

இந்த நிலையில் துணை ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் ரவி தலைமையில்,

இன்ஸ்பெக்டர் தெய்வமணி அடங்கிய தனிப்படை போலிஸார் ஆர் எஸ் புரம் பகுதிக்கு உட்பட்ட ரவுடிகளை கைது செய்ய திட்டமிட்டனர். அதனடிப்படையில் சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்ட 30 நபர்களை போலிஸார் அடையாளம் கண்டனர் .

அவர்கள் ஆயுதங்களை பயன்படுத்துவதுபர்கள் என்று தனிப்படை போலிஸாருக்கு தெரியவந்தன. கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட நாளன்று இவர்கள் ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகின்றன.

இந்த நிலையில் குற்ற பின்னணியில் உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்த தனிப்படை போலிஸார்.

ஒரே நாளில் ஜார்ஜ் ஸ்டீபன், ஜாபர் (எ) ராகுல்ராம், செல்வகுமார், உதயகுமார், கேசவன், சுப்பிரமணியன், வாசன், சூர்யா, சக்திவேல், சரவணன், சபரி ராஜ், பிரகாஷ், பிரதீப் குமார் உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்தனர்.

சட்ட ஒழுங்கை பாதுக்காக்கும் பொருட்டு, சமூக வலைதள ரீல் ரவுடிகள் , அடிதடி ரவுடிகள், கட்டபஞ்சாயித்து ரவுடிகள் என இதுவரை 60 ரவுடிகள் கைதாகியிருக்கின்றனர்.

தாதாக்களின் கும்பலின் குற்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் தெரிவித்திருக்கின்றனர் .

கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், தனிப்படை போலிஸார் நடத்தும், இந்த தீவிர வேட்டையில், ரவுடிகள் கொட்டம் அடக்கப்படுவதனால் ரவுடிகள் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!