Skip to content
Home » சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

  • by Senthil

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் கோவை குணா. இவர் சிவாஜி கனேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்களும், ரசிகர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!