Skip to content
Home » கோவை அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு….

கோவை அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு….

  • by Senthil

கோவை தொண்டாமுத்தூர் அருகே வேடப்பட்டி சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேடப்பட்டி புது குளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடைப்பதாக தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு எஸ் ஐ அருள் பிரகாசம் தலைமையிலான போலீசார் வந்தனர். மேலும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து

குளத்தில் கிடந்த உடலை மீட்டனர். மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!