Skip to content
Home » 5 லட்சம் விவசாயிகள் போராட்டம்… பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு

5 லட்சம் விவசாயிகள் போராட்டம்… பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு

  • by Senthil

பாரதிய கிசான் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பெருமாள் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது….. மத்திய பா.ஜ.க அரசு விவசாய விளைப்பொருள்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும்.இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும். உழவர் நிதி, பிரதமர் கிசான் நிதி உயர்த்தி வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம் எல்ஐசி மாதிரி தனிப்பட்ட விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகள் எந்த வகையில் இந்தியாவிற்குள் அனுமதிக்க பட மாட்டாது. கடுகு சாகுபடி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19ந் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தினரை ஒட்டி இந்த போராட்டம் நடத்த உள்ளோம் தென்னிந்தியாவிலிருந்து சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்று அவர் கூறினார். இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் வீரசேகரன்,நிர்வாகிகள் குமார், வைத்தியநாதன், அன்பழகன், பெருமாள், கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!