Skip to content
Home » கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Senthil

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் என்பவரிடம் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர் இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் லஞ்சமாக கேட்ட 20,000 பணத்துடன் தகவல் கொடுத்த நபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து காந்திகிராமம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது டிஎஸ்பி நடராஜன் மற்றும் ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், ரவிச்சந்திரனுக்கு உடந்தையாக இருந்த டீக்கடை உரிமையாளர் பாலாஜி என்பவரிடமும் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!