Skip to content
Home » முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு…. கரூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு…. கரூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Senthil

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் II / II A முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் II / II A முதல்நிலை போட்டித்தேர்வில் 71 நபர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், முதன்மைத் தேர்வுகளின் பங்கு பெறும் 71 நபர்களும் போட்டித்தேர்வர்கள் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்று கரூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எளிமையான முறையில் பணியாற்ற வேண்டும். குறிப்பாக நமது மாவட்டத்தின் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு பகுதியில் போட்டித்தேர்வுகளுக்கு, பள்ளிக்கல்விக்களுக்கான சிறப்பான மையங்கள் உள்ளன. அதேபோல் கரூர் மாவட்டத்திலும் சிறப்பான தொரு மையங்களை உருவாக வேண்டும் போட்டித்தேர்வுக்கான வினாகளுக்கு விடை அளிக்கும்பொழுது தெளிவாகவும் எடுத்துகாட்டுடன் பதில்கள்

அமையவேண்டும். எந்த ஒரு வினாக்களுக்கும் பதில் உங்களுக்குள் இருக்க வேண்டும் நீங்கள் அடுத்த தலைமுறை வழி நடத்தக்கூடிய கருத்துக்களை கொண்டு செல்வதற்கு இந்த மையம் உவமையாக இருக்கும் இந்த முயற்சி நீண்ட காலமாக கரூர் மாவட்டத்தில் இல்லாமல் இருந்தது. தற்பொது மைய நூலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளோம் என தெரிவித்தார்.

முன்னதாக சிறப்பாக பணியாற்றிய தேர்வு மைய பயிற்றுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்கள்.  இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் (சபாதி)சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மாவட்ட மைய நூலக அலுவலர் சரவணக்குமார், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார், வாசகர் வட்டத் தலைவர் சங்கர், என்.டி.சி அகாடமி இயக்குநர் சல்மான் ஹைதர் பெய்க், கர்மவீரர் காமராஜர் கல்வி அறக்கட்டளை தலைவர் குணசேகரன், கரூர் மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் வடிவேல் மற்றும் போட்டித்தேர்வர்கள் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!