கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் நித்யா (எ) நித்தியானந்தம். இவருக்கும் ராயனூர் பகுதியை சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி என்பவருக்கும் இருந்து வந்த முன்விரோதம், கோஷ்டி தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ராயனூர் பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்ட போது, முகேஷ் (எ) ராமசுப்பிரமணி, ஷோபனா, ரம்யா ஆகிய மூன்று பேர் முதலில் கைது செய்யப்படுகின்றனர்.
அதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், கரூர் மாநகரப் பகுதிகளை சேர்ந்த ரஞ்சித், கோபால், செந்தில், யுவராஜ், மூர்த்தி, பாலு உள்ளிட்ட ஆறு பேரையும் நேற்று இரவு தாந்தோணிமலை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொம்பளை சேர்ந்த கோபால் யுவராஜ் ஆகிய இருவரிடம் இரண்டு கை துப்பாக்கிகள், மற்றவர்களிடம் அரிவாள் உள்ளிட்ட பயங்கர பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்த போது, வந்த தகவலின் அடிப்படையில் 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்த தாந்தோணிமலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.