Skip to content
Home » அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை குறித்து சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  கூறியதாவது:

சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகின்றது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த செய்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே வருமான வரிச் சோதனைநடக்கிறது.

கர்நாடக தேர்தலில் பணத்தை கொண்டுபோய் குவித்தும் பாஜக தோல்வியை தழுவியது. கர்நாடக தேர்தலுக்காக இதுவரை பிரதமர் மோடி செய்யாத அளவிற்கு அதிக பரப்புரை செய்தார். கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 27 கிமீ நடந்து தெருத்தெருவாக ஓட்டு கேட்டார், அனுமன் பெயரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க நாடகம் நடத்தினார்; பதுக்கிய ரூ.2000 நோட்டுகளை எல்லாம் விநியோகித்தார்கள்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவு பாஜகவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறும் முடிவை அரசு எடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அண்ணாமலை திட்டமிட்டு டார்கெட் செய்கிறார். செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திட்டமிட்டு செய்கிறார். எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இந்த சோதனை எல்லாம் கண்டு அஞ்சமாட்டார்கள்.  மாநில காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்துவது சந்தேகமளிக்கிறது. திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்துவே காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் ரெய்டுக்கு சென்றனரா? இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!